கிரீன் டீ எனப்படும் பசுந்தேநீர் உலகம் முழுவதும் சத்துகள் நிறைந்த பானமாக கருதி உட்கொள்ளப்படுகிறது. ஜப்பான் நாட்டில் அதிகம் பருகப்படுகிறது. அங்கு உணவில் தவறாமல் பசுந்தேநீர் பருகப்படுகிறது. மிக அதிக அளவு , தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் இந்த தேநீரில் காணப்படுகிறது. பசுந்தேநீர் எடுப்பது உடலுக்கு அதிக அளவு நன்மை பயக்கும்.
பசுந்தேநீர் உடல் எடையை குறைத்து இதய நோயை தடுக்கிறது.
பசுந்தேநீர் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தி ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
மூட்டுகளை வலுப்படுத்தி எலும்பு சம்பந்தமான நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.
தோலுக்கு பளபளப்பு அளித்து சருமம் அழகாக இருக்க உதவுகிறது. மேலும் அழகு சாதனப் பொருட்களுக்கும் பயன்படுகிறது.
பாக்டீரியாக்களை அழித்து பற்களை பாதுகாக்கிறது. வாயை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.
செரிமான சக்தியை உடலில் தூண்டி உணவை வேகமாக செரிக்க செய்கிறது.
புற்று நோய் வருவதை தடுக்கும் என்றும் நம்பப் படுகிறது.
மன அமைதியை அதிகரித்து தேவையற்ற அழுத்தத்தை குறைக்கிறது.
இத்தகைய நன்மைகள் கொண்ட இந்த பசுந்தேநீரை பருகி நன்மை அடையுங்கள்.
Ongil Wellness and Healthcare provides natural and organic food, food supplements, protein supplements and medicinal products. We provide the following items for purchasing online. They are fully organic and 100% natural.If you order online, we will contact you and get the order details over phone. Please contact us for more details.
No comments:
Post a Comment